ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு
செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு
செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை
ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக்
கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும்
குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத்
தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி
நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...