வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இம்மாதம், 9ம் தேதி, சென்னை, திருச்சி,
கோவை, மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை எழுத 3,500க்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளனர்.
சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞராக பிராக்டீஸ்
செய்ய வேண்டும் என்றால், பார் கவுன்சில் நடத்தும், தகுதி தேர்வில் வெற்றி
பெற வேண்டும். இந்த தகுதி தேர்வுக்கு, தமிழகத்தில் படிக்கும் சட்ட
மாணவர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தகுதி தேர்வை
கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என, பார் கவுன்சில் கூறியது.
கடந்த, ஜனவரியில் நடந்த, தகுதி தேர்வில், 3,000க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது, இம்மாதம், 9ம் தேதியன்று, தகுதி
தேர்வு நடக்க உள்ளது. சென்னையில், நான்கு, திருச்சியில், இரண்டு, கோவையில்,
இரண்டு, மையங்களில் தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், டி.செல்வம்
கூறியதாவது: தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நுழைவுச் சீட்டு அனுப்பி
வைக்கப்படும். தேவையான தகவலை பார் கவுன்சிலின் இணைய தளத்தில் பெறலாம்.
நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், தகுதி தேர்வுக்கு
விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள,
தேர்வு மையத்துக்கு, ஒரு மணி நேரம் முன்பாக சென்று, அங்குள்ள
மேற்பார்வையாளரை அணுக வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...