குரூப் 4 பிரிவின் கீழ் வரும் இளநிலை உதவியாளர்
பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 17ம் தேதி
தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள
பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
தட்டச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 6-ம் தேதி நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் கோரியுள்ளபடி
மூலச்சான்றிதழ்கள் மற்றும் அவைகளுக்கான சான்றொப்பமிடப்பட்ட நகல்களை
கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும்.
மேலும், கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் 10-ம்
வகுப்பு படிப்பை தமிழ்வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமை கோரியுள்ள
விண்ணப்பதாரர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர்
ஆகியோரிடம் சான்றிதழ் பெற்று கலந்தாய்வுக்கு வரும் போது கண்டிப்பாக
எடுத்து வர வேண்டும்.
இந்தச் சான்றிதழ் அவர் விண்ணப்பிக்கும்போது,
தமிழ் வழியில் பயின்றார் எனக் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக்
கொள்ளப்படும். மேலும், தட்டச்சர் பதவிக்கான அரசு தொழில்நுட்பக் கல்வித்
துறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை
சரிபார்ப்பின்போது கட்டாயம் அளிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி.
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...