தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்
சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வானவியல் குறித்த 3 நாள் குளிர்கால வகுப்பு
நடைபெற உள்ளது.
டிசம்பர் 28ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை
நடைபெற உள்ள இந்த வகுப்புகளில் சூரிய குடும்பம், சந்திரன் குறித்த
தகவல்கள், நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, பால்வெளி மண்டலம்
உள்ளிட்டவை பற்றி கற்றுத் தரப்படும். இவ்வகுப்பில் 7,8 மற்றும் 9ஆம்
வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். நட்சத்திரங்கள், கோள்கள்,
சூரியன், வானவெளிகளை நவீன டெலஸ்கோப் மூலம் பார்க்கும் வசதியும்
இவ்வகுப்பில் செய்யப்பட்டுள்ளது.
காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இவ்வகுப்புகள் நடைபெறும். முன்பதிவு செய்யும் முதல் 50 மாணவர்கள் மட்டுமே குளிர்கால வானவியல் வகுப்பில் கலந்து கொள்ள முடியும். மேலும், விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 044 - 24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...