Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் இலவச சிற்றுண்டி


      சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை வேளைகளில் இலவச சிற்றுண்டி வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


      வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன.

சிறப்பு வகுப்புகள் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை 2 மாதங்களுக்கு நடைபெறும். அவ்வகுப்புகளின்போது மாணவர்களுக்கு சிற்றுண்டியாக சுண்டல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 60 நாள்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு 50 நாள்களுக்கும் இலவச சிற்றுண்டி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 631 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 6 ஆயிரத்து 754 பிளஸ் 2 மாணவர்களுக்கும் வாரத்தின் 6 நாள்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

ஜனவரி முதல் வாரத்திலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.80 வீதம் செலவிடப்படுகிறது. 2 மாதங்களுக்கான மொத்த செலவினம் 25 லட்சத்து 63 ஆயிரத்து 568 ரூபாய். மாநகராட்சி சார்பில் கல்வி தர மேம்பாடு சிறப்பு வகுப்பு செலவுகளின் கீழ் இதனை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive