Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு 5.3 லட்சம் இலவச லேப்-டாப் விநியோகம்

         அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 5.3 லட்சம் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் விநியோகிக்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     பிளஸ் 2 மாணவர்களுக்கான லேப்-டாப் விநியோகம் கடந்த மே மாதம் தொடங்கியது. தொடர்ந்து 6 மாதங்களாக பள்ளிகளின் மூலமாக நடைபெற்று வந்த இந்த விநியோகம் சில தினங்களுக்கு முன் முடிவடைந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்கள் என மொத்தமாக 9.1 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தாய்லாந்து நாட்டில் ஹார்டு டிஸ்க் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, லேப்-டாப் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. சற்று தாமதமானாலும் அனைவருக்கும் லேப்-டாப் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும், அதன்பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கும் லேப்-டாப் விநியோகம் தொடங்கியது.

மொத்தம் 5.3 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க வேண்டும். ஜூன் மாதத்துக்குள் அனைவருக்கும் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் இதுதொடர்பான முத்திரை பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் இடப்பட்டது.

அதனடிப்படையில் பள்ளிகளின் வாயிலாக லேப்-டாப் விநியோகம் நடைபெற்று வந்தது. இப்போது அனைத்து மாணவர்களுக்கும் லேப்-டாப் விநியோகிக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கல்லூரிகளில் கடந்த வருடம் முதலாண்டு படித்தவர்களுக்கும், இப்போது இரண்டாமாண்டுக்கு வந்துள்ள மாணவர்களுக்கான லேப்-டாப் விநியோகமும் தொடங்கியுள்ளது. ஒருசில வாரங்களில் இவர்களுக்கான லேப்-டாப் விநியோகமும் நிறைவடையும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த ஆண்டு மாணவர்களுக்கான லேப்-டாப் விநியோகத்துக்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive