Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு தேர்வு : தேர்ச்சி விகிதம் குறையுமா? - Dinamalar

   அரையாண்டு தேர்வு கால அட்டவணை மாற்றத்தால் , மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு,செய்முறை தேர்வு நடத்துவதில், தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் எனவும் அஞ்சப்படுகிறது.

மேல்நிலை வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு, டிசம்பர் 19 ல், துவங்கி ஜனவரி 10 ல் முடியும்படி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 23ல் தேர்வு முடியும். விடுமுறை நாட்களில், விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியர்களும், செய்முறை நோட்டு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாணவர்களும் மேற்கொள்வர். 

ஜனவரி முதல் பிப்ரவரி வரை மூன்று திருப்புதல் தேர்வு நடைபெறும். தற்போது, அரையாண்டு தேர்வே, ஜனவரி 10 வரை நடக்கிறது. அதன் பிறகு பொங்கல் விடுமுறை வருகிறது. ஜனவரி 15க்கு பிறகு மாணவர்கள் செய்முறை தேர்வில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், திருப்புதல் தேர்வுக்கு தங்களை தயார்படுத்த முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்படும்.

மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஜனவரி இரண்டாவது வாரம் வரை அரையாண்டு தேர்வை நடத்தி விட்டு, உடனே திருப்புதல் தேர்வை நடத்தினால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர். 

செய்முறை தேர்வுக்கு மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க முடியாத நிலை ஏற்படும். அரையாண்டு தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை, இயக்ககம் மாற்றியமைத்திட வேண்டும். இல்லையேல், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறையும், என்றார்.




2 Comments:

  1. மாணவனின் மனநிலையையும் உண்மையான மாணவனின் திறனும் பற்றி அரசுக்கும் கல்வியாளர்களுக்கும் உண்மையில் தெரியுமா தெரியாமலே ஏ.சி அறையில் திட்டமிடப் படுகின்றனவா?

    லீவ் விட்டால் எந்த மாணவனும் படிக்க மாட்டான் என்பதுதான் கிராமப்புறப் பள்ளிகளின் மாணவனின் நிலை.

    கிராமப் புறப் பள்ளி மாணவனின் நிலையையும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  2. மாணவர்களை குழப்பத்தில் விடக்கூடிய முடிவு.கல்விக்கு கல்லறை கட்ட முடிவு செய்து விட்டார்கள்!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive