குரங்கு கையில் பூ மாலை கிடைத்த கதையாய் ஒரு மனிதாபிமானம் இல்லாத படிக்காத முட்டாள் கையில் அன்று துப்பாக்கி கிடைத்தது.
அடுத்த நாட்டில் நம் மக்களை செல் குண்டுகளை போட்டு கொன்றவர்களை மனதிற்குள் அழுது கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தது போல எங்கே நம் நாட்டில் நம் மக்களை கொன்றவனையும் வேடிக்கை பார்க்கும் நிலை வந்து விடுமோ என்ற வருத்தம் இப்போது தீர்ந்தது.
கசாப் நம் மக்களை கொன்றதற்காக மட்டும் வருத்தப்பட வில்லை. ஒருவேளை அவன் பாக்கிஸ்தான் மக்களையும் குழந்தைகளையும் கொன்று இருந்தாலும் நாம் அவனை நிச்சயம் வெறுத்து இருப்போம்.
கொல்லப்பட்டவன் எந்த நாட்டையும் , எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை. அவன் நெல் வயலில் முளைத்த விஷ செடி. களைந்து தான் ஆக வேண்டும்.
இந்திய நீதி துறைக்கு நம் பாடசாலை வலைத்தளம் சார்பாக
தலை வணங்குகிறோம்.
ஜெய் ஹிந்த்.!
What's Your Comment?
What's Your Comment?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...