உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை,
ஒளிவு, மறைவின்றி நடத்தி, அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் பணி நியமனம்
வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு, உடற்கல்வி ஆசிரியர், சங்கம், நன்றி
தெரிவித்துள்ளது.
சங்க பொதுசெயலர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில்
கூறி உள்ளதாவது: 1,089 உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்கள் அனைத்தையும்,
ஒளிவு, மறைவின்றி வெளியிட்டு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, பணி நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக, முதல்வருக்கு நன்றி
தெரிவிக்கிறோம்.இவ்வாறு செல்வம் தெரிவித்துள்ளார்.தலைமை நிலைய செயலர்
சீனிவாசன் கூறியதாவது:சென்னை நகரின் பல்வேறு பள்ளிகளில், காலியிடங்கள்
இருந்தன. இந்த இடங்கள் அனைத்தையும், இணையதளத்தில் வெளியிட்டு,
நிரப்பியதால், ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.கல்வித்துறை
வட்டாரத்தினர் கூறுகையில்," காலி பணியிடங்கள் அனைத்தையும், அப்படியே
இணையதளத்தில் வெளியிட்டு, நிரப்பி உள்ளோம்&' என, தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...