உளுந்தூர்பேட்டை: அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை என மாணவன் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவிலுள்ள பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாட பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை.
இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டுள்ளனர்.இதனால், எந்த பலனும் கிடைக்காததால், செங்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவன், நேற்று உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், எங்கள் பள்ளியில் கணக்குபதிவியல், வணிகவியல் பாட பிரிவுக்கு ஆசிரியர் இல்லை, உடனே ஆசிரியரை நியமக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்ற போலீசார், கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...