தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் பயில்கின்ற
10 வயது முதல் 18 வயது வரை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும்
மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக பள்ளிகளில் நாப்கின் வெண்டிங் மிஷின் பொருத்தப்படுகிறது.
மாணவிகள் நாப்கின் வெண்டிங் மெஷினை பயன்படுத்தி சுகாதாரமாக இருப்பதற்கு
உதவும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த திட்டம் சார்ந்த பணிகளை
கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்
ஒருவரை நியமனம் செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
மேலும் மாநில அளவில் என்.எஸ்.எஸ் திட்ட இணை இயக்குநர் பொறுப்பு அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...