கும்பகோணம், பள்ளி தீ விபத்தில், பலியான
மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு, வழங்க வேண்டிய நஷ்டஈடு
எவ்வளவு என்பதை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை, சென்னை
ஐகோர்ட் நியமித்துள்ளது. ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒரு நபர்
கமிஷனுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில், ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் நடந்த
தீ விபத்தில், 94 குழந்தைகள் இறந்தனர்; 18 குழந்தைகள், காயமடைந்தனர்.
2004ம் ஆண்டு, ஜூலையில், சம்பவம் நடந்தது. பலியான குழந்தைகளின்
குடும்பத்துக்கு, ஒரு லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு, 25 ஆயிரம், சிறிய
அளவில் காயம் அடைந்தவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், என, கருணைத் தொகை
வழங்கப்பட்டது. இந்த தீ விபத்தில், இரண்டு குழந்தைகளை பறி கொடுத்தவர்,
இன்பராஜ். கும்பகோணம் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலராக
உள்ளார்.
ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு:
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு, தமிழக அரசு நஷ்டஈடு
வழங்கவில்லை. அரசு வழங்கிய கருணைத் தொகையை, போதிய நஷ்டஈடு என, கருத
முடியாது. எனவே, அந்த குடும்பங்களுக்கு, நஷ்டஈடு வழங்க வேண்டும். நஷ்டஈடு
எவ்வளவு என்பதை நிர்ணயிக்க, ஒரு நபர் கமிஷனை, நியமிக்க வேண்டும். இவ்வாறு,
மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தமிழரசன்,
""டாடா இரும்பு தொழிற்சாலை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 60 பேர்
இறந்தனர். நஷ்டஈட்டை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்,
நியமிக்கப்பட்டார். அவர் நிர்ணயித்த நஷ்டஈட்டை, சுப்ரீம் கோர்ட் உயர்த்தி
வழங்கியது,&'&' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன்
பிறப்பித்த உத்தரவு: சுப்ரீம் கோர்ட் மற்றும் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்
பிறப்பித்த உத்தரவுகளை கணக்கில் கொண்டு, நஷ்டஈட்டை நிர்ணயிக்க, ஒரு நபர்
கமிஷன் நியமிப்பது அவசியம் என, கருதுகிறேன். ஒரு நபர் கமிஷனை நியமிக்க,
அரசு முன் வராத நிலையில், இந்த கோர்ட் நியமிக்கிறது. ஓய்வு பெற்ற ஐகோர்ட்
நீதிபதி பி.சண்முகம், ஒரு நபர் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
எந்த அளவுக்கு அஜாக்கிரதை நடந்துள்ளது,
சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு என்ன, காயங்களின் தன்மை என்ன, ஒவ்வொரு
குடும்பத்துக்கும், எவ்வளவு நஷ்டஈடு வழங்கலாம் என்பதை, ஒரு நபர் கமிஷன்,
நிர்ணயிக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு, மேற்கொண்டு மருத்துவ உதவி
தேவையா என்பதையும், குறிப்பிட வேண்டும். பரிந்துரைகளையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...