10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒவ்வொரு
மாவட்டத்திலும் கட்டிட வசதியுடன் கூடிய தனி மையம் அமைக்க வேண்டும் என்று
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி
கூறியுள்ளதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளில் 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் மேல்நிலைப் பள்ளிகளில் 4937 ஆய்வக
உதவியாளர்கள், 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் புதிதாக
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அரசுபள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க 131 பள்ளிகளில் கூடுதல்
வகுப்பறைகள், குடிநீர் வசதி, ஆய்வகம் போன்றவற்றிற்கு 152.73 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற அரசின் நடவடிக்கைகள் பாராட்டக்கூடியது.
அதேபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல்,
ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி, தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
போன்றவைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் கட்டிட வசதியுடன் கூடிய
தனி மையம் அமைக்க வேண்டும்.
வணக்கம். காலம் கடந்த கோரிக்கை என்றாலும் மிக மிக அவசியமான கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி துறை ஒவ்வொரு பள்ளியாக தேடி தேடி ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து நடத்துவது மிக மிக கடினமான பணி. இதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டால் எல்லா ஆசிரியரும் மாவட்ட கல்வி துறையும் நன்றி சொல்லும்
ReplyDelete