'டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு
மற்றும்பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டு
சென்னை ஐகோர்ட்டில் இன்று (26 ம் தேதி)விசாரணை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில்
ஏதாவது பட்டப்படிப்பு படித்திருந்தால்ஒரு ஆண்டில் கூடுதல் பட்டப் படிப்பு
(டபுள்டிகிரி) படிக்கும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே
போல்,ஏதாவது முதுகலை பட்டம் படித்திருந்தாலும் ஒரு ஆண்டில் கூடுதல் முதுகலை பட்டமும் பெறும் வசதி இருந்து
வருகிறது.இந்த வசதியின் மூலம்பட்டங்களை பெற்றவர்கள் கல்வித் துறை பல்வேறு
துறைகளில் புதிய நியமனம், பதவி உயர்வு போன்றவற்றையும் பெற்று வந்தனர்.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் பலர்
பயன் பெற்று வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் இதுசம்பந்தமாக
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இதனையடுத்து பதவி உயர்வு மற்றும்
பணி நியமனங்களுக்கு டபுள் டிகிரி பட்டங்கள் செல்லாது என உத்தரவு வெளியானது.
இதனால் ஏற்கனவே டபுள்டிகிரி பட்டங்களை பெற்று பதவி உயர்வு மற்றும் பணி
நியமனம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டனர்.தொடர்ந்து இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி
தலைமையிலான நீதிபதி கொண்ட குழுவிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில்
மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்தவிசாரணை இன்று (26ம்
தேதி) நடத்தப்படுகிறது.வரும்டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் இந்த உத்தரவு
வெளியானால் ஏற்கனவே பதவி உயர்வு பெற முடியாதவர்களும்,ஆசிரியர் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற முடியாமல்பாதிக்கப்பட்டவர்களும்
பயன் பெறுவர் என்ற சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பலத்தஎதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
Thanks for ur information
ReplyDelete