Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆனந்த விகடனே நீங்களுமா?


     கடந்த வார விகடன் புத்தகத்தின் இறுதி பக்கத்தில் ஒரு கார்டூனை விகடன் வெளியிட்டு உள்ளது.


      அதில் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் 3 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதை குறிக்கும் வகையில் படத்துடன் " Exam Success , Teachers Fail " என்ற வாசகத்துடன் கார்ட்டூன் வெளியிடப்பட்டு உள்ளது.


       பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்க்கு அடுத்தபடியாக உடனடி அரசு வேலை காரணமாக ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர்.


    2004 ஆம் ஆண்டு முதல் புற்றீசல் போல் திறக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பலரும் ஆசிரியர் பயிற்சி பெற்றனர். 

     உரிய பாட திட்டத்தின் படி பாடம் நடத்தப்பட்டு ஆசிரிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்றாலும் அத்தேர்வு முறை  தற்போது நடத்தபெறும் TET தேர்விற்கு இணையாகவோ அல்லது அதில் பாதியை தொடும் அளவிற்கோ கூட அமையவில்லை என்பதே உண்மை. மொத்தமாக கூறினால் DTEd இறுதித்தேர்வு பெரும்பாலும் Essay Type Questions ஆக அமையும். ஆனால் TET தேர்வு முழுக்க முழுக்க Objective Type Questions உடன் மிக நுட்பமாக கேட்கப்பட்டு உள்ளது.

     இது மாநில அரசு பாட திட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை CBSE பாடத்திட்டத்தின் அடிப்டையில் சோதனை செய்வது போலவோ அல்லது CBSE மாணவனை மாநில அரசு பாட திட்டத்தின் அடிப்டையில் சோதனை செய்வது போலவோ அமையும். அவரவர் பாட திட்டத்தில் அவரவர் முழுக்க தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

     மேலும் ஒரு நல்ல தேர்வு என்பது 60 % தேர்வர்கள்  வெற்றி பெறும் வகையில் வினா தாள் அமைக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் வினா தாள் அமைக்கும் முறை பற்றி வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அந்த கருத்தும் கடைபிடிக்கப்படவில்லை.

      உண்மையில் ஆசிரியர்களின் தகுதியை அளவிடும் வகையில் கடினமாக TET தேர்வு தாள் மட்டும் அமைக்கப்பெறாமல், உண்மையிலயே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் ஆசிரியர் பயற்சி பாடத்திட்டமும், தேர்வு முறையும் TET தேர்விற்கு தயாராகும் வகையில்  அமைக்கபெற வேண்டும்.

    நடைமுறையில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் முதல் TET தேர்வில் அரை சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்த TET மறு தேர்வில் 3 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    நிச்சயம் அடுத்த TET தேர்வில் 30 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெறவும், அடுத்த தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர் பார்க்கலாம்.

    "Survival of Fittest" - டார்வின்.  இது அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவரும் அறிவார்கள். இது ஆசிரியர்களுக்கும் தற்போது பொருந்தும்.

  எனவே விகடன் தயவு செய்து வருங்கால ஆசிரியர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பது பாடசாலை வலைதளத்தின் தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.

நன்றி!  






6 Comments:

  1. Is anybody will explain the fate of BSC(micro Biology ) with B.Ed passed candidate having secured 91 marks in TET(REe exam). The Government is not called me for the interview because there is no Microbiology post (BT Asst) in Govt schools. If such is the case, why the govt allowed the B Ed colleges to run BEd course for Microbiology??? Whose fault is this?????

    ReplyDelete
    Replies
    1. I also completed B.Sc Microbiology. and 97 marks in TET Re exam. It has to be decided by the equivalece commitee. I hope there is a chance to consider under botany. bcz G.O is there for considering M.Sc microbiology as M.Sc botany.

      Delete
  2. B.sc Microbiology with B.ed will only eligible for aided school science BT only.not in Govt schools.if u pass TET now u will only eligible to get AIDED School Science BT post.so try to get Aided school post.

    ReplyDelete
  3. Is anybody will explain the fate of BSC(COPUTER SCIENCE ) with B.Ed passed candidate having secured 93 marks in TET(REe exam). The Government is not called me for the interview because there is no COPUTER SCIENCE post (BT Asst) in Govt schools. If such is the case, why the govt allowed the B Ed colleges to run BEd course for COPUTER SCIENCE ??? Whose fault is this????? 8000 COMPUTER TEACHER LIFE ?????

    ReplyDelete
  4. 8000 COMPUTER TEACHER LIFE ????? :
    today school computer teacher qualification pgdca .
    but msc with b.ed .,
    bsc with b.ed
    .appa enga life ?


    Is anybody will explain the fate of BSC(COPUTER SCIENCE ) with B.Ed passed candidate having secured 93 marks in TET(REe exam). The Government is not called me for the interview because there is no COPUTER SCIENCE post (BT Asst) in Govt schools. If such is the case, why the govt allowed the B Ed colleges to run BEd course for COPUTER SCIENCE ??? Whose fault is this????? 8000 COMPUTER TEACHER LIFE ?????

    ReplyDelete
  5. B.ed cs waste today join plz 6 month pgdca course.
    only pgdca with and with out degree eligible for 11th,12th government school computer teacher.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive