முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்" நவம்பர் 21ல் நடக்கிறது.
பட்டதாரி, முதுகலை பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில்
பணிபுரிவோருக்கு, சர்வீஸ் அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக
நியமிக்கும் அரசு உத்தரவு 6 மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு
பெற 5, 7 ஆண்டுகளே உள்ள நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும்
வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், தகுதியுள்ள முதுகலை பி.எட்., பட்டதாரிகளுக்கு
சீனியாரிட்டிப்படி அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் இன்று
(நவ.,21) நியமன கவுன்சிலிங் நடக்கிறது. ஒருசில மாவட்டங்களில் இரு சதவீத
ஒதுக்கீட்டிற்கு ஆட்கள் இல்லாத நிலையில், சிவகங்கையில் இருவருக்கு வாய்ப்பு
கிடைத்திருக்கிறது.
கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை பணியாளர் சங்கம்
சார்பில், போராடி 2 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றோம். 100 காலியிடத்தில் 2
என்பது குறைவு. 5 ஆக அதிகரித்தால் ஆசிரியராகும் வாய்ப்பு பலருக்கு
கிட்டும்,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...