Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., மறுதேர்வு முடிவு வெளியீடு:இந்த முறை 3 சதவீதம் பேர் தேர்ச்சி-ஒரு பார்வை


டி..டி., மறுதேர்வு முடிவை, டி.ஆர்.பி., நேற்று மாலை வெளியிட்டது. ஜூலையில் நடந்த தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போதைய தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஜூலையில் நடந்த முதல் டி..டி., தேர்வை, 6.67 லட்சம் பேர் எழுதினர். இதில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


பல தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், அக்டோபர், 14ல் நடந்த டி..டி., மறுதேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக் கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது. இதன் காரணமாக, தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி., எதிர்பார்த்தது.

தேர்ச்சி பெற்றோர்:நேற்று மாலை வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இந்த, 19 ஆயிரத்து 246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் 18 ஆயிரம் உள்ளது. அதனால் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 8849 பேர் மட்டுமே உள்ளதால் இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 7 ஆயிரத்து 500 மட்டுமே உள்ளதால் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கும்.வேலைக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 6ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது. அவர்களுக்கு அழைப்புக்கடிதம் எதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட வில்லை. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்ளவேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு:தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 6முதல் 9ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வீட்டு முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது.தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பம் இட்ட இரண்டு செட் நகல் சான்றிதழ்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கூடுதலாக, சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அட்டையை, எடுத்துச்செல்ல வேண்டும்.


தேர்வு முடிவு-முழு விவரம்

முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34
மொத்தம்
எழுதியோர்-6,56,698
தேர்ச்சி பெற்றோர்-19,246
சதவீதம்-2.93

ஜூலை தேர்வை எழுதியோர்-6,67,483
தேர்ச்சி பெற்றோர்-2,448
சதவீதம்-0.33




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive