மத்திய அரசு 2009ம் கொண்டு வந்த ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் இலவச
மற்றும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை, அமல்படுத்துவதற்கான அவகாசம்,
ஆர்.டி.இ., சட்டம், நாட்டில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
அனைவருக்கும், இலவச கட்டாய அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது.
இந்தியா முழுவதும் 13 லட்சம் துவக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி கட்டடங்கள்,
வகுப்பறைகள், நாற்காலிகள், குடிநீர், டாய்லெட், விளையாட்டு மைதானம் மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் என ஒன்பது அடிப்படை வசதிகளை, நுõறு
சதவீதம் அனைத்து பள்ளிகளிலும் நிறைவேற்றி இருக்க வேண்டும் எனவும்;
ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனவும்
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, இதை நிறைவேற்றுவதற்கு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு,
2013 மார்ச் 31ம் தேதி காலக்கெடு விதித்திருந்தது. இருப்பினும்,
இக்கெடுவுக்கள் பெரும்பாலான பள்ளிகள், அதை நிறைவேற்றவில்லை.
சமீபத்தில், நாடு முழுவதும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய
ஆய்வில், 95 சதவீத பள்ளிகள், இச்சட்டத்தில் குறிப்பிட்ட நடைமுறைகளை
பின்பற்றவில்லை என தெரிவித்தது. நாட்டில் உள்ள 10 பள்ளிகளில் ஒன்றில் தான்,
குடிநீர் வசதி செய்யப் பட்டுள்ளதாகவும், ஐந்து பள்ளிகளில், இரண்டில்
டாய்லெட் வசதியே இல்லை எனவும், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
உள்ளதாகவும் ஆய்வு தெரிவித்தது.
இந்நிலையில் காலக்கெடு, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது. புதிய காலக்கெடுவாக, 2015 மார்ச் 31ம் தேதியை, மத்திய
அரசு நிர்ணயித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...