தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 7 பேருக்கு முதன்மை கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
7 பேருக்கு பதவி உயர்வு
திருவள்ளூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கே.தனபாலன் பதவி உயர்வு பெற்று, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி மாவட்ட கல்வி அதிகாரி பி.முருகன், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் மாவட்ட கல்வி அதிகாரி சி.சண்முகம் பதவி உயர்வுபெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.
தேனி–திண்டுக்கல் மாவட்டம்
தேனி மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி ஜே.சாந்தமூர்த்தி, கரூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட கல்வி அதிகாரி வி.விஜயன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆர்.மகாலிங்கம் பதவி உயர்வு பெற்று, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
2 பேர் இடமாற்றம்
திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) பி.சுகுமார் தேவதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆர்.சிவகாமசுந்தரி மாற்றப்பட்டு, அதே மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...