வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் கடை முகம் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்று உள்ளூர் விடுமுறையானா லும் 1881ம் ஆண்டு செலா வணி முறிச்சட்டத்தின்கீழ் வரப்பெறாததால் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்த எண் ணிக்கை கொண்ட ஊழியர்களை கொண்டு செயல் படும். 15ம் தேதி விடுமுறை யை ஈடுசெய்யும் வகையில் 24ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என கலெக்டர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...