ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11ம் ஆண்டில்
ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு பணி நியமனம்
கலந்தாய்வு நவ.,15ம் தேதி நடைபெறுகிறது.
2010-11ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு ஒதுக்கீடு பெறப்பட்டும், மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட பணி நாடுநர்களுக்கு எதிர்வரும் நவ.,15ம் தேதியன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அழைப்பாணை பெறப்பட்ட உரிய சான்றுகளுடன்
தவறாது கலந்து கொள்ளுமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...