தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை
பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Oct 14 nadantha tntet exam la paper 2 la pass panavanga kuravaga irupathal 5%mark kuraika soli namakal sangeetha courtla case file panirukanga.. two week kula reply pana trb ku court notice.
ReplyDelete