Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)- "மாறுகிறது ரேங்க் பட்டியல்"


               ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.


                 ஆசிரியர் தகுதி தேர்வு என்றழைக்கப்படும் டி.இ.டி. தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், ரேங்க் பட்டியல், புதிய விதிமுறைகளின் படி, மாற்றி அமைக்கப்படுகிறது.

  ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

  இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

  புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive