Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிப் பணிகளை பலர் விரும்புவது எதனால்?




கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் மற்றும் அதிகாரி நிலைப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நமது இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிக அளவில் போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது. எதனால் வங்கிப் பணிகளை நோக்கி நமது இளைஞர்கள் பயணிக்கின்றனர் வேகமாக வளரும் துறை பாங்கிங்தான்.
சுதந்திரத்திற்குப் பிறகும், குறிப்பாக தேசிய மயமாக்கப்படலுக்குப் பின்பும் இந்தியாவில் வங்கித் துறை படு வேகமாக வளர்ந்து வருகிறது. Class Banking to Mass Banking என்னும் அடிப்படையில் குறிப்பிட்ட சிலருக்காக இயங்கி வந்த பொதுத் துறை வங்கிகள் தேசிய மயமாக்கலின் பின் பொது மக்களுக்கான வங்கிச் சேவையைத் தருவதில் கவனம் செலுத்தின.
இதனால் வங்கிக் கிளைகள் ஒருபுறமும் டெபாசிட் அக்கவுண்டுகள் மறுபுறமும் அதிகரித்துக் கொண்டே சென்றன. வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் பாங்கிங் துறையை அனைவரும் நாடுகின்றனர். வரக்கூடிய கால கட்டத்திலும் வங்கித் துறையானது மேலும் வளரும் என்பதே பொருளாதார எதிர்பார்ப்பு என்பதால் இதில் வேலை வாய்ப்புகளை பலரும் நாடுகின்றனர்.
அருமையான சம்பளம்
வங்கித் துறையில் ஊழியர்களுக்குத் தரப்படும் சம்பளமானது தனியார் துறை வங்கியல்லாத நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் இல்லை தான் என்றாலும் இந்தப் பணிகளுக்குத் தரப்படும் சம்பளமானது மோசமானதும் அல்ல என்பதே உண்மை. கிளார்க் பணிகளுக்கு இந்த சம்பளம் என்றால், வங்கியில் கவர்ச்சிகரமான பணி என்பதே அதிகாரி நிலையில் தரப்படும் சம்பளம் தான்.
சம்பளம் தவிர பிற படிகளும் இளைஞர்களைக் கவருகின்றன. வீட்டுக் கடன் வசதி, பண்டிகைக்கான கடன், வாகனக் கடன், கம்ப்யூட்டர் கடன் என கடன் வசதிகள் குறைந்த வட்டியில் வங்கிப் பணிகளில் கிடைக்கின்றன. இதுவும் நமது இளைஞர்கள் வங்கிப் பணிகளை நாடுவதற்கான மற்றொரு முக்கியக் காரணம் எனலாம்.
வங்கித் துறை இவ்வளவு வேகமாக வளருவதாலேயே அதன் ஊழியர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. திறன் வாய்ந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் வங்கிகள் முனைப்பு காட்டுகின்றன.
பல திறன்களுக்கும் வாய்ப்புகள் உள்ள துறை கிளார்க் மற்றும் பி.ஓ., என்று மட்டுமல்ல, ஐ.டி., ஆபிசர், சி.ஏ., கம்ப்யூட்டர் திறனாளர், சிவில் இன்ஜினியர் என பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. விற்பனைப் பிரிவில் எண்ணற்ற காலியிடங்கள் எப்போதும் இருப்பதால் இளைஞர்கள் வங்கிகளை நாடுவதில் ஆச்சரியமில்லை. விரும்பக் கூடிய பணிச் சூழல் லேட் ஹவர் ஒர்க் எனப்படும் கால வரம்முறையற்ற பணித்தேவை இங்கில்லை என்றே கூறலாம்.
கார்ப்பரேட் சூழலில் வங்கிகள் இயங்குவதால் இங்கு பணி புரிவது என்பது மிக விரும்பத் தக்க ஆசை என்றே கூறலாம். ஒயிட் காலர் பணி என்றால் இது தான் ஒயிட் காலர் பணி.  எனவே இளைஞர்களே! வங்கிகள் காத்திருக்கின்றன தங்களுக்கான நபர்களைத் தேர்வு செய்ய....உங்களை,உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு வங்கிகளோடு இணையுங்கள் அவற்றின் முன்னேற்ற ஓட்டத்தில்....




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive