தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், இன்று விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடக்கிறது.மொத்தம் 10 முக்கிய மையங்கள் மூலம், 76 துணைதேர்வு மையங்களில், இத்தேர்வு நடக்கிறது.
இதுதொடர்பாக பாரதியார் பல்கலை தேர்வாணையர் செந்தில்வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இத்தேர்வை, 58 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதுகின்றனர். 10 ஆயிரத்து 508 பேர் சென்னையிலும், 9,812 பேர் திருச்சியிலும், 7,344 பேர் சேலத்திலும் எழுதுகின்றனர்.மொத்தம் 31 ஆயிரத்து 498 பெண்களும், 26ஆயிரத்து 736 ஆண்களும் எழுதும் இத்தேர்வில், பெண்களே அதிகம்.
இதில், 268 பார்வையற்றவர்களும், 991 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குரிய தேர்வு மையங்களில் தரைதளத்தில் எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 27 பாடப்பிரிவுகளில் எழுதப்படும், இத்தேர்வில் 7,345 பேர் கம்ப்யூட்டர் சயன்ஸ், வணிகவியலில் 6,020 பேரும், 5,516 பேர் உயிரி அறிவியலிலும் தேர்வு எழுதுகின்றனர்.
மிகக்குறைந்த அளவாக, தத்துவவியலில் 62 பேரும், இசைப்பாடத்தில் 93 பேரும் எழுதுகின்றனர். இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...