ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ள கருத்தை மாணவர்களிடம் திணிப்பவர்களாக இருப்பதில்லை.
நல ஒழுக்கம் வளர்ப்பவரகவும், வெளி உலக அறிவை ஏற்படுத்துபவர்களாகவும் உளவியல் முறையில் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு மாணவர்களின் தனித்திறமையை வளர்ப்பவரகவும் இருக்கிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களின் தனிதிறமையையும் நிருபித்து வருகின்றனர்.
இவ்கையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு.த .ஜெ . கோகுலராஜ் அவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 08.09.2012 அன்று 24 மணி நேரம் தொடர்ந்து பல தலைப்புகளில் விவாதித்து புதிய "டாக் ஷோ " உலக சாதனை படைத்து உள்ளார். இதில் 20 அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு சாதனை படைத்து உள்ளார்கள்.
இந்த சாதனை "இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் " இல் இடம் பெற்று உள்ளது.
ஆசிரிய ஆசிரியைகளின் தனி திறனை வெளிப்படுத்திய இந்த சாதனை வருங்கால மாணவர்களையும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க ஊக்கப்படுத்தும் வகையில் அமையும் என்பது நிச்சயம்.
சாதனை படைத்த அனைவருக்கும் பாடசாலை வலைதளத்தின் பாராட்டுக்கள்.
EXCELLENT RECORD MR.GOKULARAJ SIR
ReplyDeleteAND CONGRATULATIONS TO YOUR TEAM
I FELT REALLY PROUD OF YOUR WORLD RECORD
BY
MATTRU THIRANALIGAL SANGAM