அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் 31ம் தேதிக்குள் 14 லட்சம் மரக்கன்றுகளை நட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளை பசுமைப்படுத்தும் விதத்தில்,
வனத்துறை மூலம் மரக்கன்றுகளை பெற்று பள்ளி வளாகத்தில் நட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி 13,93,695 மரக்கன்றுகளை வருகிற 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் நட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது.சுற்றறிக்கை யில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவங்களை தலைமை ஆசிரியர்கள் பூர்த்தி செய்து, தங்கள் பள்ளிகளில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் விபரத்தினை தெரிவித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகள் தேவை விவரம் பெறப்பட்டவுன், பள்ளிக்கு ஒதுக்கப்படும் மரக்கன்றுகளை பெறுவது குறித்த விவரம் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மரக்கன்றுகள் பள்ளிகளில் நட்டு ஒவ்வொரு மரக்கன்றுகளையும் வகுப்பு வாரியாக ஒதுக்கீடு செய்து, பராமரிக்கும் பொறுப்பினை மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.