என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் இளைஞர் விவகாரம், விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்படுத்தப்படுகிறது.
கிராமத்திலோ, புறநகர் பகுதியிலோ இத்திட்ட முகாம்களில் தூய்மை படுத்துதல், மரம் வளர்ப்பு,மேடை நிகழ்ச்சிகள், சமூக பிரச்னைகள், கல்வி, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பல வேலைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு முகாமுக்கு 25 மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, ஒரு பள்ளிக்கு 11,250 ரூபாய், நிதி வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், தற்போது முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, முள்வெட்டுதல், புல் வெட்டுதல், கிராமங்களை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்யக் கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...