சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால பாடப் பிரிவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நேற்று மூன்றாம் நாளாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடப்பிரிவுகள் (இன்டகிரேட் கோர்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இப்பாடப் பிரிவுகள் அரசு அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியர் கடந்த 17ம் தேதி பல்கலை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
மூன்றாவது நாளான நேற்று, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் எதையும் கேட்காமல் கோஷம் எழுப்பினர். பேச்சு வார்த்தையின் போது, ஆத்திரமடைந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பிரகாஷ் என்பவர், தனது சான்றிதழ்களை வீசியெறிந்து, "வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவே தயாராக இல்லை' என, ஆவேசமாகக் கூறி வெளியேறினார். அதிருப்தியடைந்த பேராசிரியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் மயக்கமடைந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...