அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, அக்டோபர் மாத இறுதியில், தகவல் குவியல்களுடன் கூடிய, 90 பக்கங்கள் கொண்ட இலவச, அட்லஸ் வினியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பாடநூல் கழக வட்டாரம் கூறியதாவது:மொத்தம், 90 பக்கங்கள் கொண்டதாக, அட்லஸ் இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் பயன்படும் வகையில், உயர்ந்த தரத்தில், அதிக தகவல்கள், புள்ளி விவரங்கள், அதிக படங்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.
அட்லஸ் தயாரிப்பதற்கு, டேராடூனில் உள்ள, இந்திய சர்வேயர் ஜெனரலிடம், அனுமதி பெற வேண்டும். கடந்த, 6ம் தேதி, அனுமதி கிடைத்து விட்டது. சென்னையைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடம், "அட்லஸ்' தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில், இந்த நிறுவனங்கள், அச்சடிப்பு பணியை துவங்கும். அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்.தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வது குறித்து, எந்த யோசனையும் இப்போது இல்லை. கோரிக்கைகள் வந்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...