தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோளாக உள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். கடலூர் மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் நடுநிலைப்பள்ளி கூடத்தில் நடந்த கண்பரிசோதனை முகாமில் பங்கேற்ற எம்.சி.சம்பத் கூறியதாவது:-
மருத்துவ முகாம் நடத்துவது தலைசிறந்த பணி, முக்கிய பணி, வரலாற்று பணியாகும். அய்யப்ப தர்மசேவா சங்கம் நடத்தும் மருத்துவ முகாம் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படும் அரியபணி. நீங்கள் நடத்தும் அனைத்து சேவை பணிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
தமிழ்நாடு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.750 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்களும் உயரிய சிகிச்சை பெற முடியும்.
தமிழ்நாட்டில் கல்வி வளம் மேம்பாடு அடைய வேண்டும். இதன் மூலம் மனிதவளம் மேம்பாடு அடையும். பிறகு பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது தான் முதல்-அமைச்சரின் நோக்கமாகும். இதனால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதே முதல்வரின் குறிக்கோளாக உள்ளது.
இதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்களை அடையாளம் கண்டு அறுவை சிகிச்சை செய்யும் பணி வரவேற்கத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...