தொழிற்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அம்மாணவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையினை ஒரே சீராக ரூ.500-ஆக உயர்த்தியுள்ளதாகவும், இதற்காக அரசு ரூ.12.94 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளாதகவும், மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க ரூ.3.47 கோடி ஒதுக்கியிருப்பதாகவும், இந்த புதிய அறிவிப்பின் மூலம் 3,476 மாணவர்கள் பயன் அடைவர் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...