பள்ளி மாணவ-மாணவிகள் இடையே படிப்பை தவிர உடல் நலம் மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தையும் மேம்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
பாடத்தில் வாங்கும் மதிப்பெண்களுடன் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 5-ம் வகுப்பில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பரிந்துரைகள் கோரப்பட்டு, பள்ளிகளில் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
விரைவிலேயே இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. உடல் தகுதி தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இதயம், உடல் பலம், உடல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உடற்பரிசோதனையில் இடம்பெறும். அதன் அடிப்படையில் மதிப்பெண் அல்லது கிரேடு அளிக்கப்படும். சிறந்த உடல் அமைப்பு, உடல் தகுதியை கொண்ட மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் அளிக்கவும், மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...