தமிழகத்தில் நடந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு, முடிவுக்கு வந்துள்ளது. அக்., 2ம் தேதி, கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி, மே 24ம் தேதி துவங்கியது. அரசு ஊழியர்களுடன்,
பெல் நிறுவனத்தின் பணியாளர்களும் இணைந்து, "டேப் லெட்' கம்ப்யூட்டர் உதவியுடன் இப்பணியை நடத்தினர்; சில இடங்களில், கம்ப்யூட்டர்களை இயக்க, மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இப்பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை ஆதாரமாகக் கொண்டு நடந்தது. எடுக்கப்பட்ட தகவல்கள், தினமும், "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யப்பட்டன. இவ்விவரங்கள் முழுமையாக இல்லாததால், பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆய்வு குறித்த விவரங்கள் சரிதானா என, மேற்பார்வையாளர்களால், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி 40 நாட்களில் முடிக்க வேண்டிய பணி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கணக்கெடுப்பு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க பொது மக்களுக்கு, இம்மாத இறுதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், தயாரிக்கப்படும் இறுதி பட்டியல், அக்., 2ம் தேதி, கிராம சபை கூட்டத்தில், மக்களின் அங்கீகாரத்திற்காக வைக்கப்பட உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...