ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வை, 6.50 லட்சம் பேர் எழுதினர். இதன் கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான தகவல், தேர்வு நடந்த அன்றே வெளியானது. இதையடுத்து, குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.
இந்த முறைகேடு தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், ரத்தான குரூப்-2 தேர்வு, நவம்பர், 4ம் தேதி நடக்கவுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.இது குறித்து தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:ஏற்கனவே, குருப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே, மறு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்து, ஆகஸ்டில் நடந்த தேர்வில் பங்கேற்காதவர்களும், நவ., தேர்வில் பங்கேற்கலாம். இதற்கென, தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள், மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் முடிவு வெளியிடப்படும்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...