திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் நேற்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் திடீர் ஆய்வு நடத்தினார். காலை 9.30 மணிக்கு எடப்பிறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். இறைவணக்கம் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆசிரியர்களும் மிகவும் தாமதமாக வந்தனர். எனவே, இறை வணக்கம் கூட்டம் நடத்தாத பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், தாமதமாக வந்த இடைநிலை ஆசிரியர் குணசேகரன், பட்டதாரி ஆசிரியர் திருமுருகன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். அங்கு கையெழுத்திடாமல் வருகைப்பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் சுதா, இடைநிலை ஆசிரியர்கள் செல்வராணி, வேலவன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» தாமத வருகை -ஆசிரியர்களினொரு நாள் சம்பளம் பிடித்தம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...