ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1க்கான பல விடைகள், தவறாக வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வினாத்தாள் பல குழப்பங்களுடன் இருந்ததால், பலராலும் முழுமையாக விடையளிக்க முடியவில்லை, என்று தேர்வு எழுதியவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டாயக் கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், ஆசிரியராக பொறுப்பேற்க, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என, அரசு அறிவித்தது. இதற்கான தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்களுக்கு, தாள்-1 என, காலையிலும், பி.எட்., படித்தவர்களுக்கு, தாள்- 2 என, மதியமும் இத்தேர்வு நடந்தது. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புகார்: ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1க்கான விடைகள், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பல வினாக்களுக்கான விடைகள் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சரியான விடை எழுதிய ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தர்மபுரி, பொம்மிடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சின்னசாமி கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1ல் ஆங்கிலம், கணிதம் மற்றும் இ.வி.எஸ்., பகுதிகளில், ஒரு சில வினாக்களுக்கு முற்றிலும் முரணான விடைகள் வழங்கப்பட்டுள்ளன. ‘டி’ வரிசை வினாத்தாளில், 68வது வினாவுக்கு சரியான விடையாக ஆப்ஷன், ‘சி’(ஹாடு பிளேய்டு) தரப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வினாவில், ‘யஸ்டர்டே’ என, வருவதால், ஆப்ஷன் ‘ஏ’ (பிளேய்டு)தான் சரியான விடை.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1ல் ஆங்கிலம், கணிதம் மற்றும் இ.வி.எஸ்., பகுதிகளில், ஒரு சில வினாக்களுக்கு முற்றிலும் முரணான விடைகள் வழங்கப்பட்டுள்ளன. ‘டி’ வரிசை வினாத்தாளில், 68வது வினாவுக்கு சரியான விடையாக ஆப்ஷன், ‘சி’(ஹாடு பிளேய்டு) தரப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வினாவில், ‘யஸ்டர்டே’ என, வருவதால், ஆப்ஷன் ‘ஏ’ (பிளேய்டு)தான் சரியான விடை.
வினா எண் 67ல் ஆப்ஷன் ‘பி’ (மச்) சரியான விடையாக தரப்பட்டுள்ளது. ஆனால், சூழ்நிலைக்கு ஆப்ஷன் ‘டி’(லிட்டில்) தான் சரியான விடை. இதே போல் வினா எண் 68க்கும் ஆப்ஷன், ‘ஏ’(டு) என, விடை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ‘டு’ வை அடுத்து, ‘பீயிங்’ என்ற பிரசன்ட் பார்டிசிபல் வருவது முறையல்ல. இவ்வினாவுக்கு ஆப்ஷன், ‘பி’(பார்) பொருத்தமான விடை.
வினாத்தாள் பல குழப்பங்களுடன் இருந்ததால், பலராலும் முழுமையாக விடையளிக்க முடியவில்லை. விடைகளிலும் இதே முரண்பாடு தொடர்வது அதிர்ச்சியாக உள்ளது. இவற்றை களைய ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...