குழந்தைகளின் விருப்பம்போல், படிக்கும் துறையை தேர்வு செய்ய அனுமதியுங்கள்&'&' என, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசினார்.
கோவை, ஜி.ஆர்.ஜி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பூங்கோதை வரவேற்றார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசியதாவது: குழந்தைகளின் விருப்பம் அறிந்து, அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறையில், பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
10ம் வகுப்பு முடித்ததும், பிளஸ் 2 வுக்கு செல்வோர், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்ற போட்டியை, பெற்றோர்களே உருவாக்குகின்றனர். திறமை இருந்தால், எந்த துறையாக இருந்தாலும், சாதிக்க முடியும். அனைவரது உள்ளத்தில் பதிந்துள்ள சிந்தனையில், இது போன்ற கல்வி தான் உயர்ந்தது என்ற எண்ணம் உள்ளது. எந்தக் கல்வியை கற்றாலும், அதை சிறப்புறச் செய்தால், அதற்கான வாய்ப்புகள், சாதனைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கியம், ஓவியம், விளையாட்டு போன்ற துறைகளில், குழந்தைகளை ஊக்கப்படுத்தும்போது, அவர்களது கற்பனை திறன் மேலும்,மேலும் உயர்கிறது. பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே விளையாட அனுமதிக்கின்றனர். கல்வியை விட, விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் பள்ளியிலும், வீட்டிலும் கொடுக்கும்போதுதான், கல்வியை மிக துல்லியமாக கற்க முடியும்.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை, இந்தியாவால் பெற முடியவில்லை. குழந்தைகளிடம் உள்ள திறமையை அறிந்து, அதை ஊக்கப்படுத்தினால், திறமை தானாக வளரும்.
அடிப்படை அறிவியலை கற்றுக்கொண்டால் மட்டுமே, அறிவு வளரும். மேலை நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், அடிப்படை தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுகின்றன. இந்தியாவின் பெரும் வெற்றியாளர்கள், அடிப்படை அறிவியலை அறிந்ததால் சாதித்துள்ளனர். எனவே, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும், அடிப்படை அறிவியலை அனைவரும் கற்பது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...