இரட்டை பட்டம் செல்லாது என்று . உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் குழுவாக இணைந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.வழக்கு விசாரனை முடிந்த நிலையில் நீதியரசர் மதிப்புமிகு இராமசுப்பிரமணியன் இன்று தனது தீர்ப்பில் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதித்திருந்த இடைக்கால தீர்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதது மட்டுமல்லாமல் பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக ஒருங்கிணைப்பு குழுவைச்சார்ந்த திரு;ஆரோக்கியராஜ் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...