சென்னை, ஆக.,15: தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்பதவிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாளாகவும், வங்கி அல்லது அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தேர்வணையம் அறிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...