Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு - ரூ.9300 - 34800 + 4200GP என்ற சம்பள விகிதத்தினை அரசிடம் பரிந்துரை செய்வோம் என ஊதிய குழு பதில்!!!




இடைநிலை ஆசிரியர்கள், ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெற்று ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம். ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் ரூ.3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிதவர்களுக்கு கூடரூ.9300 -34800+4200GP முதல் 4600GP வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர்.
மேலும் அரசாணை எண்.23ல் ரூ.750 தனி  ஊதியமாக ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சு பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்படும்  என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக்  கூறியுள்ளனர். நம்மைவிட அவர்களுடைய கல்வித்தகுதி குறைவு. மேலும் சுமார்  1,16,000க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்தால், பொருள் செலவு அதிகமாகும் என்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். மருத்துவ துறையில் புதிதாக நியமனம் பெறும் மருத்துவர் கிராமப்புறங்களில் கண்டிப்பாக சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு  ஊக்க ஊதியமும் வழங்கி வருகின்றனர். ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் கரடு முரடான, பாதைகளே இல்லாத இடங்களிலும் ,மலைப்பகுதிகளிலும் தன்னலம் பாராமல் வருங்கால பாரதம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆதலால், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் தருகின்றோம் என்று ஒரு நபர் குழுவில் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில்  பணிபுரிவதற்கு  மேலும் ஒரு ஊக்க ஊதியம் அரசு தான் தரவேண்டும். இந்தக் இழப்புகளை எதிர்த்துத்தான் நமது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்  பதிவு செய்துள்ளனர். நமது இயக்கமும் மூன்று நபர் ஊதியக்குழுவிடம் நமது ஊதிய முரண்பாட்டை நேரில்  வலியுறுத்தி  உள்ளோம். இதற்கு தற்போது செலவினத்தின் செயலாளர் உயர்திரு.S .கிருஷ்ணன் I.A.S  அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற  வழக்கு எண்MP.(MD) No2  of 2012 in W.P.(MD)9218 of 2012. ற்கு  உயர் நீதிமன்றத்திற்கு     பதில் அளித்துள்ளார்.அவற்றில் நமது ஊதியம் 5200 - 20200 + 2800 இருந்து  9300 -34800 +4200   வழங்குமாறு  வழக்கு பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு அரசு பரிசீலித்து உரிய அரசாணை பிறப்பிக்கும் என்று சாதகமான பதில் அளித்துள்ளார்.விரைவில், நமக்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் .
நன்றி : திரு. இராபர்ட் (செய்தி பகிர்வு)

(குறிப்பு : மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் எவரையும் குறை கூறுவதற்காக வெளியிடப்பட்டதல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive