தமிழக கல்வித்துறையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வக கையேடு இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு முதல், பத்தாம் வகுப்பிற்கும் அறிவியல் ஆய்வக பயிற்சி துவங்கப்பட்டது. மாணவர்களுக்கு தனியாக பயிற்சி புத்தகம் வழங்கவில்லை. ஆசிரியர்களுக்கு மட்டும் புத்தகம் வழங்கப்பட்டது. இதை வைத்து ஆய்வக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தாண்டு முதல், அறிவியல் ஆய்வகத்திற்கு தனியாக, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வழங்கப்பட்டு வரும் புத்தகத்தில் ஆய்வக வசதிகள், பயன்படுத்தும் முறை, செய்முறை பயிற்சி குறித்தும், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் உள்ளவைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரங்கநாதன் கூறியதாவது: கடந்தாண்டில் ஆய்வகம் குறித்து, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் தெளிவா புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது மாணவர்களின் கையில் புத்தகம் இருப்பதால், ஆசிரியர் நடத்தும்போது மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். சந்தேகங்களை உடனடியாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள முடியும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...