ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிய 6 லட்சம் பேரில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.
இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளது. அந்த வழக்கு விசாரணை மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. தேர்ச்சி அடையாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்தும் யோசனையும் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...