Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை 40 சதவீதமாக குறைக்க திட்டம்- தினமலர் செய்தி


    டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. 

    கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.

    டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

   தகுதி மதிப்பெண்ணைகுறைத்தால் சிக்கல் தான்:டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, தகுதி மதிப்பெண்களை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டும் குறைத்து முடிவெடுத்தால், அடுத்த தேர்வுக்கும், இதே தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். இதற்கு, டி.ஆர்.பி., சம்மதிக்காத பட்சத்தில், தேர்வர்கள், கோர்ட்டை நாட வேண்டிய நிலை உருவாகும்.எனவே, நடந்து முடிந்த தேர்வு உட்பட, இனி நடத்தப்போகும் தேர்வுகளுக்கும், ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நடந்து முடிந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு தேர்வை நடத்த வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒரு முடிவை எடுக்காவிட்டால், டி.ஆர்.பி.,க்கு சிக்கல் தான்!
 ( இது எதிர்பார்க்கப்படும் செய்தி மட்டுமே , அதிகார்கபூர்வமான தேர்வு முடிவுகளுக்கு பின்பே முழுமையான தகவல்களை பெற முடியும் )




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive