400 பறக்கும் படை மேற்பார்வையில் குரூப்- 2 தேர்வு
காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான, குரூப்- 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். இதற்காக தமிழகம் முழுவதும் 114 மையங்களும், 3,456 தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும், 290 தேர்வுக் கூடங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.
நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தணிக்கை உதவி ஆய்வாளர் உட்பட, 3,631 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-2 தேர்வு, டி.என்.பி. எஸ்.சி.,யால் அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பித்த, 6.4 லட்சம் பேரும் எழுதுவதற்காக, 114 மையங்களும், 3,456 தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. இதில், சென்னையில் மட்டும், 290 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வில், பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு அல்லது பொது ஆங்கிலம் மையப் படமாக இருந்தது.
தேர்வில் முறைகேடு ஏதும் நிகழாமல் இருக்க, அனைத்து தேர்வுக்கூடங்களும் வீடியோ கேமரா மற்றும் வெப் கேமராவால் பதிவு செய்யப்பட்டன. மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க, 400 பறக்கும் படைகள் பணியில் ஈடுபட்டன.
குரூப்-2 விடைத்தாள் குளறுபடி: நட்ராஜ் விளக்கம்
சென்னை: காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான, குரூப்- 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். இதற்காக தமிழகம் முழுவதும் 114 மையங்களும், 3,456 தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும், 290 தேர்வுக் கூடங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சி.எஸ்.ஐ., பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வின் போது, தனக்கொடி என்ற பெண்ணிடம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளின் நகலை வைத்திருந்ததாக புகார் எழுந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது:தேர்வு நடப்பதற்கு முன், வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை. ஆனால், ஈரோட்டில் தேர்வு எழுதிய பெண்ணின் கையில் வினாத்தாள் நகல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வெழுதிய மாணவர் சுரேஷ் கூறும்போது, பொது அறிவு வினா எளிதாகவே இருந்தது. பொதுத் தமிழிலும் கஷ்டமான கேள்விகளும் இல்லை. கணக்கிலிருந்தும் கேள்வி எளிதாகவே கேட்கப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் படித்திருந்தால் அனைத்து கேள்விகளும் எளிது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...