Home »
» பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள்-பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள்-பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத் தேர்வை மட்டுமல்லாமல், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும், தேர்வுத் துறையே நடத்துகிறது
கேள்விகளை, "CD யில் பதிவு செய்து, மாவட்ட வாரியாக, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை விரைவில் அனுப்ப உள்ளது. "CD' யில் இருந்து, தேவையான கேள்வித்தாள்களை, "பிரின்ட்' எடுத்து, மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்ய, பள்ளி தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
விடைத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்வர். எனினும்,மாணவ, மாணவியர் எப்படி தேர்வு எழுதியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...