தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1000 ஆக நிர்ணயிப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என பி.எப். வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் தொழிலாளர்கள் 6.16 கோடி பேர் பி.எப். சந்தா செலுத்துகின்றனர். பி.எப். வாரியத்தில் கடந்த 2011ம் ஆண்டு நிலவரப்படி ரூ.4.66 லட்சம் கோடி நிதி உள்ளது. இத்தொகையில் இருந்து குறிப்பிட்ட பகுதி, ஓய்வூதிய நிதியாக பிரிக்கப்படுகிறது. இதிலிருந்து சந்தாதாரர்கள் ஓய்வு பெற்றதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் செலுத்திய சந்தா அடிப்படையில் கொடுக்கும் போது, சிலருக்கு வெறும் ரூ.100 மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
எனவே, ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1000 ஆக நிர்ணயிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், பி.எப். வாரியத்தின் டிரஸ்டிகள் கூட்டம் டெல்லியில் நடந் தது. இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர், டிரஸ்டி ஒருவர் கூறியதாவது:குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக நிர்ணயிக்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். நிதியை வங்கிகளில் 5 ஆண்டு கால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...