Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்க பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பங்களில் ஏற்பட்ட தவறுகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய கடைசி வாய்ப்பாக TRB முகாம் நடத்தப்பட உள்ளது-TET Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Special Intructions


   கீழ்கண்ட கால அட்டவணை படி TRB அலுவலர்களிடம் தங்களின் குறைகளை எடுத்து கூறி அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
   முகாம்களில் பங்குபெறுபவர்கள் தங்களின் விண்ணப்பம் நகல், பணம் கட்டிய செலான் மற்றும் DEO அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தற்க்கான உறுதிச்சான்று(ACKNOWLEDGEMENT) ஆகியவை தவறாமல் கொண்டுவந்து பயனடைய TRB அறிவுறுத்தியுள்ளது.
Click Here & Download District wise Special Grievance Meeting for those who not received Hall Ticket 
Tamil Nadu Teacher Eligiblity Test 2012 - Special Instructions:
Teachers Recruitment Board is conducting Teacher Eligibility Test on 12.7.2012. In this regard, TRB received complaints that some applicants had submitted in the DEO’s office but they have not received call letters. The TRB had put in its website details of all applications received on 20.5.2012 and had asked candidates to verify their details and report to the TRB if there is any complaints/discrepancy. Before the issue of hall tickets, TRB has received 71 representations regarding the non availability of their details in the website and they are under verification.




Many candidates have failed to verify their details and represent to Teachers Recruitment Board on time. Now, after issue of hall tickets, some more candidates are representing that they have not received the hall tickets. Though they have failed to verify their details and represent in time they are unreasonably arguing in the TRB Headquarters. To afford last opportunity to the genuine candidates, the Board has decided to send its Officers for spot verification as per the schedule below. The candidates who have not received the hall tickets are advised to meet the officers in person at the concerned Headquarters along with (i) copy of their application form (ii) copy of challan and (iii)acknowledgement/endorsement for submission of application at DEO Office where application was submitted. 

டி.இ.டி., தேர்வு: ஹால் டிக்கெட் கிடைக்காதவருக்கு மாற்று ஏற்பாடு: 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அதிகாரிகளை அணுகலாம் என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

      இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில், வரும் 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது; 6.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக, மொத்தம் எட்டு லட்சம், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. 55,339 பேர், தேர்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். 
      மாற்றுத் திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் தேர்வெழுத, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கள் பெயரில் திருத்தம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், உரிய ஆதாரத்துடன், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரை, தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அணுகலாம். 
   விண்ணப்பத்தில், பிறந்த தேதியை தவறாகக் குறிப்பிட்டுள்ள  விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதை திருத்திக் கொள்ளலாம். டி.இ.டி., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்&' இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், நாளை (இன்று) முதல் 7ம் தேதி வரை, தங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் டி.ஆர்.பி., அதிகாரிகளை அணுகலாம். 
அவர்களிடம், தங்களின் டி.இ.டி., விண்ணப்ப நகல், தேர்வுக் கட்டண ரசீது, விண்ணப்பத்திற்கான ஒப்புகை அட்டை ஆகியவற்றை கொடுத்து, "ஹால் டிக்கெட்&' பெறலாம். அதிகாரிகளை சந்திக்கும் நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெறலாம். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive