பிளஸ் 2 மறுமதிப்பீடு: 1,149 மாணவர்கள் மதிப்பெண் உயர்வு: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுக்குப்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி, 2,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த மொத்த மாணவர்களில், ஆயிரத்து 176 பேரின் மதிப்பெண்கள் மாறியிருப்பதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில், ஆயிரத்து 149 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, 73 மதிப்பெண்கள் வணிகவியல் பாடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 177 மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. வேதியியல் பாடத்தில், 16 மதிப்பெண்கள் குறைந்தபட்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த, ஆயிரத்து 176 மாணவர்களின் புதிய மதிப்பெண் விவரம் அடங்கிய "சிடி&' மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கும், அண்ணா பல்கலைக்கும், நேற்று அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
மருத்துவப் படிப்பிற்கான சிறப்புப் பிரிவு கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. அதே போல், பொறியியல் கவுன்சிலிங் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, உடனடியாக புதிய மதிப்பெண் அடங்கிய விவரங்கள், இரு துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பதாரர்கள், தங்கள் மதிப்பெண் மாறியிருக்கிறதா என்பதை, இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். புதிய மதிப்பெண் சான்றிதழ்கள், மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...