காரைக்குடி அரசு மருத்துவமனை அருகில், ரயில்வே ரோட்டில் காது கேளாதோர் பள்ளி உள்ளது. ஆரம்பத்தில், நகராட்சி பொறுப்பில் இந்த பள்ளி, விடுதி வசதியுடன் இயங்கியது. ஏராளமான காதுகேளாத, மிகவும் பின்தங்கிய ஏழை மாணவர்கள், 1 முதல் 5 ம் வகுப்பு வரை படித்து வந்தனர்.
இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றதையடுத்து, பள்ளி விடுதி செயலற்று போனது. மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் குறைந்தது. பின்னர், அரசு காதுகேளாதோர் பள்ளியாக மாறியது. தற்போது, ஆசிரியராக மோத்திகுமார் பணியாற்றி வருகிறார்.
இவரும் புதுக்கோட்டையிலிருந்து, "டெபுடேஷன்&' அடிப்படையில் தினமும் வந்து செல்கிறார். இதுவரை 5 மாணவர்கள் சேர்க்கை மட்டுமே நடந்துள்ளது. ஆனால், யாரும் பள்ளிக்கு வருவது இல்லை. ஆசிரியர் மட்டும் தினமும் காலையில் வந்து, மாலையில் செல்கிறார்.
பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பெஞ்ச், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பயன்பாடின்றி உள்ளது. இங்குள்ள கிணற்றிலிருந்த மோட்டாரை கழற்றி சென்று விட்டனர். இதனால், மாணவர்களுக்கு தண்ணீர் வசதி இல்லை. வகுப்பறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டடம் பல ஆண்டுகளாக திறப்பு விழா காணாமல் உள்ளது.
பொறுப்பாளராக இருக்கும் பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை மீனா கூறுகையில்,"பெண் ஆசிரியர் இல்லாததால், பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கின்றனர்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...